மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4950 days ago
சிவகங்கை: சிவகங்கை ரயில்வே கேட் அருகில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சிவகங்கை கிளை தொழிலாளர்கள் பராமரிப்பில் உள்ள மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 10.50 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தண்ணீர் ஊற்றப்பட்டது. அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்பட பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.