மகாலிங்க சுவாமி குரு பூஜை விழா
ADDED :1752 days ago
பாலமேடு : பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் 40ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. மடத்தில் கும்ப கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து விநாயகர் கோயிலில் தீபாராதனை நடந்தது. ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு வழிபாடு செய்தனர். துணி தானம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்து கமிட்டி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் வேலு மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.