பவழங்குடி சித்தர் ஜீவ சமாதியில் குரு பூஜை விழா
ADDED :1752 days ago
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழங்குடி சித்தர் ஜீவ சமாதியில் 214 வது ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 8 மணிக்கு, முதல் கால யாக வேள்வியுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை வழிபாடு நடந்தது. மதியம் 1 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டடது. எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், செல்வம் எம்.எல்.ஏ., முத்தழகன், வீரராகவன், தமிழ்மணி உட்பட பலர் தரிசனம் செய்தனர். சித்தர் குருபூஜையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் முதல்வர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து, நலம் விசாரித்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பவழங்குடி சித்தர் திருத்தொண்டு சபையினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.