தென்கரை காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1749 days ago
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை கீழரதவீதி காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.யாகசாலை பூஜை மற்றும் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உட்பட 16 வகையான பொருட்களில் அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் சின்னுச்சாமி, பூஜாரி கேசவன் செய்திருந்தனர்.