பழநி முருகன் கோயிலில் தங்கத்தொட்டில் சேவை துவக்கம்
ADDED :1749 days ago
பழநி : பழநி முருகன் கோயிலில் தங்கத்தொட்டில் சேவை இன்று (பிப்.8) முதல் மீண்டும் துவங்கவுள்ளது. பழநி மலைக்கோயிலில் கைக்குழந்தைகளை தங்கத்தொட்டிலில் இட்டு பிரார்த்தனை செய்வர். கொரோனாவால் கடந்த மார்ச் 19 முதல் இச்சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் வழிகாட்டுதல்படி இன்று (பிப்.8) காலை முதல் மீண்டும் இச்சேவை துவங்கப்பட உள்ளது. ரூ.300 கட்டணமாக செலுத்தி தங்கத்தொட்டில் பிரார்த்தனையை நிறைவேற்றலாம். மேலும் பிரசாதம் வழங்கப்படும் என, செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.