அமைச்சர் உதயகுமார் பழநியில் முடிகாணிக்கை
ADDED :1745 days ago
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் முடிகாணிக்கை செலுத்தினார். பழநி மலைக்கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்தார். கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார். வருவாய்த்துறை அதிகாரிகள் அமைச்சரை சந்தித்தனர்.நேற்று அதிகாலை முடிகாணிக்கை செலுத்திய உதயகுமார் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றார். விஸ்வரூப அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்தார். திருஆவினன்குடி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார். தற்போதைய அரசியல், அரசு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்காமல் சென்றார்.