உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துணை முதல்வர் திருமலையில் வழிபாடு

துணை முதல்வர் திருமலையில் வழிபாடு

 திருப்பதி: திருமலை, ஏழுமலையானை, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழிபட்டார்.

திருமலை, ஏழுமலையானை வழிபட, தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்று முன்தினம் இரவு தன் தொண்டர்கள் சிலருடன் திருமலைக்கு வந்தார். அவரை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடு செய்தனர். இரவு, திருமலையில் தங்கிய அவர், ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் சேஷ வஸ்திரம், லட்டு, வடை, தீர்த்த பிரசாதம், திருவுருப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். அதை பெற்றுக் கொண்டு கிளம்பிய அவர், திருச்சானுார் சென்று, பத்மாவதி தாயாரை தரிசித்தார். பின் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !