நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1739 days ago
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, அன்று மதியம் 4:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் கோமாதா பூஜை நடந்தது. அதனையொட்டி, சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. பாமா, ருக்மணி சமேதராக வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.