வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் நிறைவு
ADDED :1901 days ago
செஞ்சி : செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சி நிறைவு விழா நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் 9 நாள் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி துவங்கி நடந்து வந்தது. இதன் நிறைவு விழா 13ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர்.தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்த பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கவுரவிக்கப்பட்டனர். இதில் ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, விழா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.