பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா பூச்சாட்டு
ADDED :1728 days ago
ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு, பத்ரகாளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா, இன்றிரவு பூச்சாட்டுடன் தொடங்குகிறது. பக்தர்கள் கூடைகளில் கொண்டு வரும் மலர்களால், மூலவருக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. 22ல் கொடியேற்றம், 28 பாலபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், மார்ச், 3ல் நடக்கிறது. கொரோனா ஊரடங்கால், தீ மிதிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.