உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்

பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்

மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் மாசி மக திருவிழா நாளை (பிப்.,17) துவங்கி, மார்ச், 1ல் நிறைவடைகிறது. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், மாசிமக திருவிழா நாளை துவங்குகிறது. நாளை தேர் பொங்கல், அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. தொடந்து அடுத்தடுத்த நாட்களில், சக்தி அழைத்தல், திருக்கொடியேற்றம், சின்ன தேரோட்டம், பெரிய தேரோட்டம், சத்தாபரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச், 1ல் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், தக்கார் ரமேஷ் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !