உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி கோயில் காணிக்கை வசூல் ரூ .77லட்சம்

இருக்கன்குடி கோயில் காணிக்கை வசூல் ரூ .77லட்சம்

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ .77லட்சம் கிடைத்தது.

இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் கணக்கிடப்படுவது வழக்கம்.தை கடைசி வெள்ளியில் பெருந் திருவிழா நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், நகை சரிபார்ப்பு அலுவலர் சிவலிங்கம், கோவில் உதவி ஆணையர் கருணாகரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. ரூ. 77 .68 லட்சம், 195 கிராம் தங்கம் , 988 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது . கோயில் அலுவலர்கள், ஊழியர்கள், சாத்துார், துலுக்கப்பட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !