கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1729 days ago
வடவள்ளி: குரும்பபாளையம் கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.வேடபட்டி அடுத்த குரும்பபாளையத்தில், கருப்பராய சுவாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 13ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அன்றைய தினம், இறை அனுமதி பெறுதல், முளைப்பாலிகை வழிபாடு, பேரொளி வழிபாடு நடந்தது.14ம் தேதி யாகசாலை பூஜை, விமான கலசம் நிறுவுதல், மூலமந்திர வேள்வி நடந்தது. நேற்று, அதிகாலை, 4:45 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை நடந்தது. அதனைத் தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.