அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1729 days ago
மேலுார் : மேலுார் அருகே அ.கோவில்பட்டியில் செல்வவிநாயகர், நெவுலிநாத அய்யனார் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.இதை முன்னிட்டு பிப்., 13 முதல் யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் நேற்று சிவாச்சார்யார்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர். அட்டப்பட்டி, கீழையூர், கீழவளவு கிராமத்தினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.