திருநாங்கூர் 11 கருட சேவை
ADDED :1839 days ago
பெருமாளின் திவ்யதேசங்கள் 108. இதில் 11 கோயில்கள் ஒரே ஊரில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! அந்த பெருமைக்குரிய ஊர் தான் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருநாங்கூர். இங்கு திருக்காவளம்பாடி, திருஅரிமேய விண்ணகரம், திருவண் புருடோத்தமம், திருச்செம்பொன்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்யதேசங்கள் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஊரைச் சுற்றி திருத்தேவனார் தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து கோயில்கள் உள்ளன. இவற்றை திருநாங்கூர் 11 திவ்யதேசங்கள் என்பர்.
ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேச பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூரில் ஒன்று கூடுவர். அப்போது திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் (பாடுதல்) செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அதன் பின் மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.