உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவிரம்! மாசி மக திருவிழா ஏற்பாடுகள்...அரசு அதிகாரிகள் ஆலோசனை

தீவிரம்! மாசி மக திருவிழா ஏற்பாடுகள்...அரசு அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி : மாசி மக தீர்த்தவாரி ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் சப் கலெக்டர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், பெரிய காலாப்பட்டு, நல்லவாடு கடற்கரைகளில் மாசி மக தீர்த்தவாரி விமரிசையாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.வைத்திக்குப்பத்தில் நடக்கும் திருவிழாவில் 130க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து வரும் உற்சவர்களுக்கு கடலில் தீர்த்தவாரி நடத்தப்படும். உள்ளூர் மட்டு மின்றி விழுப்புரம், கடலுார் மாவட்ட கோவில்களில் இருந்தும் சுவாமிகள் எழுந்தருள்வர். தீவனுார் விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மயிலம் முருகர், திண்டிவனம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் பாரம்பரியமாக வைத்திக்குப்பம் தீர்த்த வாரிக்கு வருகின்றனர்.

வைத்திக்குப்பம் கடற்கரையில் மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய வருவர்.கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தும் நிலையில் மாசி மக திருவிழா வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன், சப் கலெக்டர் (வடக்கு) கந்தசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். சாரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார், போக்குவரத்து எஸ்.பி., சுப்ரமணியன், தாசில்தார்கள் ராஜேஷ் கண்ணா, குமரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், வரதராஜன், பொதுப்பணித் துறை உதவிப் பொறி யாளர் பாவாடை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.போக்குவரத்து தடைவைத்திக்குப்பம் கடற்கரையில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக பாறைகளை பொதுப்பணித் துறையினர் சமன் செய்து, மணலை பரப்ப வேண்டும். துறைமுகத் தில் துார் வாரி குவிக்கப் பட்டுள்ள மணலை பயன்படுத்த அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைத்திக்குப்பத்தில் கட்டப்படும் 2 கழிவறைகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திருவிழாவுக்கு முன்பாக திறக்க வேண்டும் , ஏற்கனவே உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய புதுச்சேரி நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், வைத்திக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்தை தடை செய்து, சீராக பராமரிக்க நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.திருவிழா நாளில் தீயணைப்பு வாகனத்தை வைத்திக்குப்பத்தில் நிறுத்த வேண்டும்.

கடலில் யாராவது தவறி விழுந்து விட்டால் காப்பாற்ற தீயணைப்புத் துறையினருக்கு உதவி ஊயாக விசைப்படகுடன் 3 மீனவர்கள் தயாராக இருக்க மீனவ பஞ்சாயத் தாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.மீனவ கிராமங்களில் இருந்து படகு மூலமாக வைத்திக்குப்பம் தீர்த்தவாரிக்கு வரக் கூடாது. கடற்கரையோரத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர காவல் படைக்கு கடிதம் எழுதவும் முடிவு செய்யப்பட்டது.திருவிழாவில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்த சுகாதாரத் துறையை கேட்டுக் கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மக்கள் ஒத்துழைப்பு அரசுக்கு தேவை!கொரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. மாசி மக திருவிழாவுக்கு வரும் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவுவது, சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கொரோனா பரவாமல் தடுக்க அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கந்தசாமி, சப் கலெக்டர் (வடக்கு).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !