உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்தவ சர்ச்களில் சாம்பல் புதன்

கிறிஸ்தவ சர்ச்களில் சாம்பல் புதன்

 விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவ சர்ச்களில் சாம்பல் புதனையொட்டி தவக்காலம் துவக்கமாக சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் வரை நோன்பு மேற்கொள்வர். இதன் 7 வெள்ளிக்கிழமைகளில் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடுகளையும் நடத்துவர்.சாம்பல் புததை முன்னிட்டு விருதுநகர் இன்னாசியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபரும் பாதிரியாருமான பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், துணை பாதிரியார் சந்தியாகப்பன் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை துவங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. விருதுநகர் பாண்டியன் நகர் சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஸ்டீபன் சேவியர், எஸ்.எப்.எஸ்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து தலைமையிலும், சிவகாசி ரோடு ஆற்றுப்பாலம் நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையிலும், ஆர்.ஆர்.,நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பாதிரியார் ஞானதுரை, துணைபாதிரியார் மரிய பென்சிகர் தலைமையிலும், சாத்துார் ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்தில் பாதிரியார் ஜெயராஜ் தலைமையிலும் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலம் துவங்கி வைக்கப்பட்டது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பிப். 19 முதல் ஏப். 2 வரை வரும் ஏழு வெள்ளி கிழமைகளில் சிலுவை பாதை, தவக்கால வழிபாடுகளும் நடக்கிறது.*இதுபோல் விருதுநகர் மதுரை ரோட்டில் துாய யோவான் ஆலயம், பாண்டியன் நகர் மாற்கு ஆலயத்திலும் போதகர் ஜோ டேனியல் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !