வேளாங்கண்ணியில் சாம்பல் புதன் துவக்கம்
நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு, சிறப்பு திருப்பலியுடன், சாம்பல் புதன் நேற்று துவங்கியது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர் நீத்த காலத்தை, உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவர்கள், 40 நாள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு, சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள், ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான நேற்று, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. உதவி பாதிரியார் டேவிட் தன்ராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.வழக்கமாக கிறிஸ்துவர்களின் நெற்றியில் பூசப்படும் சாம்பல், கொரோனா பரவல் காரணமாக அவர்கள் கைகளில் வழங்கப்பட்டு, தலையிலும் துாவப்பட்டது.