உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

திண்டுக்கல் தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். முதல் நாள் சாம்பல் புதனாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் பாதிரியார் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.மேட்டுப்பட்டி வியாகுலமாதா ஆலயம், குமரன் திருநகர் ஆரோக்கியமாதா, என்.ஜி.ஓ., காலனி ஆரோக்கிய அன்னை பேராலயம், மாரம்பாடி அந்தோணியார், மங்கமனுாத்து சந்தியாகப்பர் ஆலயம் உட்பட பல தேவாலயங்களில் காலை 6:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தவக்காலத்தை துவங்கினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !