உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

 திருக்கோவிலுார் - திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் ஒன்றாகும். ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் மாசிமக பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜைகள் நடந்தது.பஞ்ச மூர்த்திகள் கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, ரிஷபக் கொடி ஏற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை, யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி, ரக்க்ஷாபந்தனம், சுவாமி அதிகார நந்தி வாகனம், அன்ன வாகத்தில் எழுந்தருளி அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !