உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோவில்பாளையம்: குரும்பபாளையம், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 24ம் தேதி நடக்கிறது.

பல நூறு ஆண்டுகள் பழமையானது கோவில்பாளையம் அடுத்து உள்ள குரும்பபாளையம் செல்லாண்டியம்மன் கோவில். இக்கோவில் கொங்கு வேளாளர் சமூகத்தின் பாண்டியன் குல மக்களுக்கு குலதெய்வமாகவும் மற்றவர்களுக்கு இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் புதிதாக முன் மண்டபம் கட்டப்பட்டு, கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 15ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. வருகிற 21ம் தேதி காலையில் பாலாலய சிறப்பு பூஜையும், மாலையில் வாஸ்து சாந்தி பூஜையும் நடக்கிறது. 22ம் தேதி கோவிலில் இருந்து தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வருதலும், மாலையில் முதற்கால வேள்வி பூஜையும் நடக்கிறது. 23ம் தேதி இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நவசக்தி அர்ச்சனையும் நடக்கிறது. 24ம் தேதி காலை 6:30 மணிக்கு விமானங்களுக்கும், மூலஸ்தானத்துக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து அன்னதானமும், மகா அபிஷேகமும் நடக்கிறது. மூன்று நாட்களும் பன்னிரு திருமுறை பாராயணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் குலத்தார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !