விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1694 days ago
காரைக்கால்; காரைக்கால் புதுத்துறை கிராமத்தில் செங்கழுநீர் விநாயகர், தேசவிளக்கி மாரியம்மன், ஐயனார், குட்டி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி கடந்த 15ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கடந்த 20ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை நான்காம் கால யாக சாலை முடிந்து காலை சிவாச்சாரியர்கள் கடம் புறப்பாடுகளுடன் அனைத்து விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.