சங்கமேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்
ADDED :1695 days ago
அந்தியூர்: சங்கமேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் தேர் பழுதானது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. திருச்சி பெல் நிறுவனத்துடன் இணைந்து, பிரமாண்ட தேர் தயாரிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம், நகரில் இழுத்து செல்லப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில், திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது.