உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி தேரோட்டம்

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி தேரோட்டம்

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு ராணி சாஹிபா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பசலி மாசி  திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மத்தியபுரி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதி ராமன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !