உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனையடியான் கோவிலில் முப்பூஜை

பனையடியான் கோவிலில் முப்பூஜை

கிருஷ்ணராயபுரம்: புனவாசிப்பட்டி, பனையடியான் கருப்புசாமி கோவில் முப்பூஜை விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, புனவாசிப்பட்டியில் பனையடியான் கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யனார், பாப்பாத்தியம்மன், காமாட்சியம்மன், பழனியாண்டவர், இடும்பன், மதுரை வீரன், காத்தவராயன், மின்னடிகருப்பு ஆகிய சுவாமிகளுக்கு முப்பூஜை விழா நடந்தது. நேற்று காலை, காட்டு கோவில் காது குத்துதல், நேர்த்தி கடன் செலுத்துதல், மாயர் பூஜை நடந்தது. இன்று, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முப்பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !