மாசி மகத்தை முன்னிட்டு திருப்பட்டினத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
காரைக்கால்- திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக திருவிழாவில் 7 பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.காரைக்கால், திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நடந்தது. நிகழ்ச்சியில் நித்திய கல்யாண பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள், திருமருகள் வரதராஜ பெருமாள், திருப்பட்டினம் விழி வரதராஜ பெருமாள், திருப்பட்டினம் ரகுநாதன் பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் உள்ளிட்ட 7 பெருமாள் சுவாமிகள் கடற்கரையில் எழுந்தருளினர்.பின் பெருமாளுக்கு தீர்த்தவாரி மற்றும் தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி முடிந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக மறைந்த பலர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அதிகாலை முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.எஸ்.பி.க்கள் வீரவல்லபன், ரகுநாயகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.