வெற்றி மாநகர்
ADDED :1982 days ago
சூரபத்மனை வெற்றி பெற்ற களிப்பில் முருகப்பெருமான் அருள்புரியும் தலம் திருச்செந்துார். அறுபடை வீட்டில் இரண்டாம் தலம். இவ்வூருக்கு ‘வெற்றிமாநகர்’ என்னும் பொருளில் ‘ஜெயந்திபுரம்’ என பெயர் இருந்தது. ‘ஜெயந்தி’ என்னும் சொல்லே ‘செந்தில்’ என திரிந்தது. மாசிமாதத்தில் கடலில் நீராடி முருகனைத் தரிசிப்பது பல மடங்கு நன்மை தரும்.