உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வணக்கம் செலுத்துங்கள்

வணக்கம் செலுத்துங்கள்


உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைமை என்னும் சுவரை எழுப்புகிறார்கள். ஒருவரின் வளர்ச்சி கண்டு மற்றவர்களின் மனம் பொறுக்கவில்லை. சமுதாயத்தில் போட்டி, பொறாமை அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும். இதற்கான தீர்வு ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்வது தான்.  ‘இறையருள் உங்கள் மீது உண்டாகட்டும்’ என்பது இதன் பொருள்.
பகை உணர்வு கொண்ட ஒருவரிடம் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’  என்று சொன்னால் அவர் மனம் திருந்துவார். இறைவனின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில் நண்பராகவும் மாறி விடுவார்.  
பகைவரையும் நண்பராக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ‘‘வணக்கம் செலுத்துவதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நன்மை காணலாம். இதனால் மக்களிடையே பகை மறையும். அன்பு வளரும். அனைவரும் இணக்கமுடன் செயல்படுவர்’’ என்கிறார் நாயகம். ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என அவரிடம் கேட்ட போது, ‘‘பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதுமாகும்’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !