அம்மன் கோவிலில் கப்பரை திருவிழா
ADDED :4872 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் வள்ளியம்மை சாலையிலுள்ள வீரம்மாள் காளியம்மன் கோவில் சம்வஸ்த்ராபிஷேக மூன்றாமாண்டு நிறைவு விழா மற்றும் கப்பரை திருவிழா நடந்தது. கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் வேதாமிர்த ஏரியிலிருந்து பால்காவடி எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது. மறுநாள் காலையில் பக்தர்கள் அக்னி கப்பரை எடுத்து அம்மனை வழிபட்டனர். விழா நாட்களில் கோவலன், கண்ணகி கதாகாலட்ஷேபம் நடந்தது. நிறைவு நாளான நேற்று பவுணர்மி பூஜையும், விடையாற்றி விழாவும் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாகி அடைக்கலசாமி மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.