உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையன்குளம் வியாகுல அன்னை திருத்தல பெருவிழா கோலாகலம்

மலையன்குளம் வியாகுல அன்னை திருத்தல பெருவிழா கோலாகலம்

திருநெல்வேலி : மூன்றடைப்பை அடுத்த மலையன்குளம் வியாகுல அன்னை திருத்தல பெருவிழா கோலாகலமாக நடந்தது. மூன்றடைப்பை அடுத்த மலையன்குளம் வியாகுல அன்னை திருத்தல பெரு விழா 10 நாட்கள் நடந்தது. விழாவின் துவக்கமாக கொடியேற்றத்தை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் துவக்கி வைத்து கூட்டு திருப்பலி நடத்தினார். தினமும் காலை, மாலை ஜெபமாலை, மறையுரை நற்கருணை ஆசீர் போன்றவற்றை பங்கு தந்தைகள் ஜெயபால், கிராசிஸ் மிக்கேல், ஹெனிஸ்டன், மரியஅரசு, சலேத் ஜெரால்டு, ஜஸ்டீன், ஆன்ட்ரூ சாந்தகுமார், இருதய சாமி, நெல்சன் பால்ராஜ், சார்லஸ் நடத்தினர். 9ம் நாள் சிறப்ப ஆராதனையில் திருச்சி பங்கு தந்தை நார்பர்ட் தாமஸ், பாளை., பங்குதந்தை அந்தோணிராஜ் மறையுரை வழங்கினர். இரவு அன்னையில் தேர் பவனி நடந்தது. நிகழ்ச்சியில் மலையன்குளம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக 10ம் நாளில் கொடியிறக்க கூட்டு திருப்பலி, நற்கருணை ஆசீர் போன்றவை பாளை., பிஷப் ஜூடு பால்ராஜ், தூத்துக்குடி பங்கு தந்தை விக்டர் தலைமையில் நடந்தன. ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜோசப் ரத்தின ராஜ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !