காளி அம்மன் கோயில் விழா
ADDED :4872 days ago
நத்தம்: மருனூத்து கோட்டை காளி அம்மன் கோயில் விழா நடந்தது.பக்தர்கள் சக்தி கரகம், மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்து பொங்கல் வைத்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொகுதி அ.தி. மு.க., செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ராமராசு, மாவட்ட கவுன்சிலர் செல்வராசு, ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, மருனூத்து ஊராட்சி தலைவர் அமிர்தராஜ், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் விஜயன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் வீரப்பன், தாசில்தார் வரதராஜன் பங்கேற்றனர். சுவாமி விசுவபாரதி பேசினார். ஏற்பாடுகளை ஊர்பெரியதனம் பாண்டி, கோயில் பூசாரி தங்கவேல், வி.ஏ.ஓ., அசோகன் செய்தனர்.