திருப்புத்துாரில் தைப்பூச விழா வெள்ளி வேலுக்கு அபிஷேகம்
திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று முருகன் சன்னதியில் சுவாமிக்கும், வெள்ளிவேலுக்கும் அபிஷேகம் செய்தனர்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தைப்பூச விழா கொண்டாடுகின்றனர். டிச.,25ல் மூலவருக்கு அபிேஷகம், சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். டிச., 31 மாலையில் கார்த்திகை சிறப்பு அபிஷேகமும், ஜன.,8 ல் சஷ்டி சிறப்பு அபிஷேகமும், ஜன.,9ல் திருவிளக்கு பூஜையும், ஜன.,13ல் 108 சங்காபிஷேகமும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் சன்னதியில் சுவாமிக்கும், வெள்ளி வேலுக்கும் அபிஷேகம் நடந்தது. சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வெள்ளிவேல் வலம் வந்து திருநாகேஸ்வரர் சன்னதியில் எழுந்தருளின. ஜன.,24ல் சஷ்டி சிறப்பு அபிஷேகமும், ஜன.,26ல் பழநிக்கு பக்தர்கள் யாத்திரை புறப்பாடும், ஜன.,27 ல் கார்த்திகை பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகமும், பிப்.,1ல் தைப்பூச விழா சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தேவஸ்தானம், திருமுருகன் திருப்பேரவையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.