கோவில்பட்டியில் வைகாசி விசாகம்
ADDED :4873 days ago
கோவில்பட்டி : கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் நடந்தது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு கணபதி பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து கும்பகலசபூஜை, யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், வேதபாராயணம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இதையடுத்து ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணியய்யர் செய்திருந்தார். விழாவில் கோயில் தலைவர் குருசாமி, நிர்வாகக்கமிட்டி உறுப்பினர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், முருகன், பிரேமா, ஜெய்வைஷ்ணவி, ஜெய்மகேஷ்ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.