உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயில் கட்டட பூமி பூஜை!

காளியம்மன் கோயில் கட்டட பூமி பூஜை!

கோவில்பட்டி : கோவில்பட்டியில் காளியம்மன் மற்றும் கருப்பசாமி கோயில் கட்டட திருப்பணியை முன்னிட்டு பூமி பூஜை நடந்தது. கோவில்பட்டி காந்திநகர் காளியம்மன் மற்றும் கருப்பசாமி கோயில் கட்டட திருப்பணிக்காக பூமி பூஜை விழா நடந்தது. விழாவில் பசும்பொன் அறக்கட்டளை செயலாளர் கதிரவன், ராதா ஸ்வீட் ராதாகிருஷ்ணன், அதிமுக கோவி ல்பட்டி சட்டசபை தொகு தி செயலாளர் மாணிக்கராஜா, இணை செயலாளர் சீனிவாசன், நகர மாணவரணி செயலாளர் பாபு, அங்கமுத்து, மூப்பன்பட்டி பஞ்., தலைவர் கார்த்திக், முத்துராஜ், திருப்பணி குழு தலைவர் மருதுசெண்பகராஜ், செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் குருசாமி பாண்டியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !