உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறைவடைந்தது வேத பாராயணம்

நிறைவடைந்தது வேத பாராயணம்

 சென்னை: திருவெண்காடு சுப்ரமணிய கனபாடிகள் வேத பாராயண அறக்கட்டளை சார்பில், 83வது வேத பாராயணம் மற்றும் ஹோமங்கள், திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவிலிலும், மஹா பெரியவாளின் கோவில் ஆகியவற்றில் நடந்தேறின.

இதுகுறித்து, அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி சந்திரன் மேலும் கூறியதாவது:சங்கரராம தீட்சிதர் மற்றும் குரு சிவாச்சாரியார் இவற்றைச் செய்வித்தனர். ஒரே நாளில், க்ருஷ்ண யஜுர் வேதம், ஸம்ஹிதா பாராயணம், அச்சித்ரா அஸ்வமேத பாராயணம் ஆகியவை, நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, நடத்தப்பட்டது. அடுத்த, 84வது ஆண்டு பாராயணம் மற்றும் மஹா ருத்ர யக்ஞம், 13.02.2022 முதல், 23.02.2022 வரை, திருவெண்காட்டிலேயே நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !