உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

 பாகூர்; குடியிருப்புபாளையம் வரசித்தி வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.பாகூர் அடுத்த குடியிருப்புபாளையத்தில் வரசித்தி வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது.2ம் தேதி காலை 8.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, வேதிகா அர்ச்சனை, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.கும்பாபிஷேக விழா நேற்று (3ம் தேதி) நடந்தது. காலை 6.30 மணிக்கு நான்காம் காலயாக சாலை பூஜை, 8.00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 10.00 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ராஜவேலு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !