உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்தரசி அம்மன் கோயிலில் பூச்சாட்டு பொங்கல் விழா

பட்டத்தரசி அம்மன் கோயிலில் பூச்சாட்டு பொங்கல் விழா

திருப்பூர்:மங்கலம் அருகே வேலாயுதம்பாளையம், பட்டத்தரசியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது.விழா கடந்த 23 ம் தேதி, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 27ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் கம்பம் சுற்றியாடும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1ம் தேதி, விநாயகர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 2ம் தேதி, அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தலும், நேற்று அம்மன் பொங்கல் விழாவும் நடந்தது. பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் ஆராதனையும் நடந்தது. இவற்றில் திரளானோர் கலந்து கொண்டனர்.நேற்று மாலை கம்பம் எடுக்கப்பட்டு, கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !