மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1645 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1645 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1645 days ago
தேனி: தேனி அம்மச்சியாபுரத்தில் கோயில் சீரமைப்பின் போது பல ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இங்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு சொந்தமான வேட்டை கருப்பசாமி கோயில் உள்ளது. கோயில் சேதமடைந்ததால் பூஜாரி ஈஸ்வரன் தலைமையில் நேற்று சீரமைப்பு பணிகளை துவக்கினர். கோயில் சுவர் இடித்த போது ஒரு பொருள் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதனை அப்பகுதியினர் எடுத்து பார்த்தனர். அதில் 100க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் இருந்தன. பல நுாறு ஆண்டு கோயிலில் இருந்த ஓலைச்சுவடி அப்பகுதியினர் ஆர்வமாக படித்தனர்.அவைகள் தமிழ் வட்டெழுத்து முறையில் எழுத்துக்கள் இருந்தன.ஓலைச்சுவடி குறித்து சர்வேயர் கணேசன் கூறுகையில், எங்கள் மூதாதையர்கள் கருமாத்துார், திருச்செந்துார், கோவில்பட்டி பகுதியில் வசித்த பூர்வ குடிகள். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் அம்மச்சியாபுரத்தில் குடியேறினர். தற்போது கிடைத்துள்ள ஓலைச்சுவடியில் சில சேதம் அடைந்துள்ளது. சிலவற்றை ஆய்வு செய்தபோது ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்ததாக தெரிகிறது. அதில் குடும்பர் வரலாறு, பாண்டியர் வரலாறு, சிவன் கோயில் வழிபாடு, திருச்செந்துார் கோயில் ஆகியவற்றை பற்றிய குறிப்புகள் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடியாக இருக்கலாம். இதனை தெளிவாக படிக்க இயலவில்லை. எனவே, ஓலைச்சுவடிகளை தொல்லியல் துறையில் ஒப்படைத்து அதில் உள்ள விபரங்களை அறிய முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.
1645 days ago
1645 days ago
1645 days ago