லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
கீழக்கரை - கீழக்கரை அருகே லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மார்ச் 1 அன்று முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.விக்னேஷ்வர பூஜை, பஞ்சகாவ்ய பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம் நடந்தது.ஐந்தாம் கால யாகசாலையை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு கொடுமலுார் ஸ்ரீதர் சுவாமி, நாகர்கோவில் சந்திரசேகர செல்லமணி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாடார் உறவின் முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் கண்ணன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.மார்ச் 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு மகாகணபதி ேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக் ஷா பந்தனம், கடல்தானம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 7.00 மணிக்கு க்ருஷ்ண சுப்ரப்தம், விக்னேஸ்வர் பூஜை, நவக்கிரஹ ேஹாமம், லெட்சுமி நாடி சந்தனம், பூர்ணஹூதி, இரண்டாம் கால பூஜை தீபாராதனை நடந்தது. கோமாதா பூஜை நடத்தபட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது. சிறப்பு பூஜை, தீபாராதனைக்கு பின்பு அன்னதானம் நடந்தது.