மகா சிவராத்திரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
மதுரை: மகாசிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக தென்பகுதியினர் மகாசிவராத்திரி நாளில் தங்கள் குல தெய்வத்தை வழிபட சொந்த ஊர்களுக்கு புறப்படுவர். தொழில், வியாபார ரீதியாக வடமாநிலங்கள், மாவட்டங்களிலுள்ளவர்கள் தென்மாவட்டங்களுக்கு அன்று செல்வர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கார்களில் அவர்கள் செல்ல தயங்குகின்றனர். அவர்களின் நலனுக்காக முன்பதிவு இல்லாத சாதாரண கட்டண ரயில்களை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.தை அமாவாசையைமுன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்கிய போல மகா சிவராத்திரி விழாவிற்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் கோட்ட மேலாளர் லெனினிடம் மனு அளித்துள்ளார்.