உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா மஹா சிவராத்திரி விழா ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு

ஈஷா மஹா சிவராத்திரி விழா ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு

கோவை: மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, ஈஷா மஹா சிவராத்திரி விழா, ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை, ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். வரும், 11ம் தேதி, மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, ஈஷா மஹா சிவராத்திரி விழா, ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே, நேரில் பங்கேற்க முடியும். அவர்கள், கோவிட் பரிசோதனை அறிக்கையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், நேரில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள், டிவி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பங்கேற்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மஹா சிவராத்திரி விழாவை ஒட்டி, ஆதியோகி மற்றும் தியானலிங்கம், நாளை முதல், 11ம் தேதி வரை, தற்காலிகமாக மூடப்படுகிறது. 12ம் தேதி, காலை, 10:30 மணி முதல், பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !