உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

மன்னீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

அன்னூர்: அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா வரும், 11ம் தேதி நடக்கிறது.

மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, வருகிற 11ம் தேதி இரவு 7:00 மணிக்கு முதல் கால அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு, இரண்டாம் கால அபிஷேகமும், நள்ளிரவு 1:00 மணிக்கு, மூன்றாம் கால அபிஷேகமும், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு, நான்காம் கால அபிஷேக பூஜையும் நடக்கிறது. 11ம் தேதி இரவு 9:00 மணி முதல் அச்சம்பாளையம், சண்முகம் குழுவின் பஜனை மறுநாள் காலை வரை விடிய விடிய நடக்கிறது. சிவராத்திரியன்று விரதமிருந்து, கண்விழித்து, சிவபெருமானை வழிபட்டால் நற்கதி அடையலாம் என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !