உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - வீடு வாங்கலாம்

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - வீடு வாங்கலாம்

அனுபவ அறிவினால் வெற்றி குவித்திடும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாம் இடத்தில் சனியின் அனுகூல பலமும் சேர்க்கையும் பெற்றுள்ளார். ராகு கேதுவைத்தவிர மற்ற கிரகங்கள் நற்பலன் தந்து உங்கள் வாழ்வில் புதிய வளங்களைத்தருவர். நல்லவிதமாகப் பேசி சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சி வெற்றிபெறும். புத்திரர்கள் படிப்பில் சாதனை நிகழ்த்துவர். பூர்வசொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு கூடுதல் பணவரவு உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியும் உறவினர் வருகையும் நிகழ்ந்து மனதை மகிழ்விக்கும். கடன் அடைப்பீர்கள். வீட்டு சாதனம் வாங்குவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்ப வாழ்வை சிறப்பாக்குவர். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தி, புதிய ஒப்பந்தம் பெறுவர். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த அரசு தொடர்பான உதவி கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் சந்தை வாய்ப்பு கிடைத்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். தாராள பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். பணியாளர்கள் உத்வேக செயல்முறையால் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணிகளை இலகுவாக செய்து முடிப்பர். குடும்பப் பெண்கள் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமைந்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைத்து உற்பத்தி, விற்பனை அளவை உயர்த்துவர். அரசியல்வாதிகள் கூடுதல் பதவி, பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும் கால்நடை வளர்ப்பில் தாராள லாபமும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல தேர்ச்சியும் விரும்பிய பொருள்கள் வாங்க அனுகூலமும் பெறுவர்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 30.6.12 பிற்பகல் 3.52 முதல் 2.7.12 மாலை 6.21 வரை
வெற்றி நாள்: ஜூன் 19, 21
நிறம்: ரோஸ், மஞ்சள்      எண்: 1, 3


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !