இருக்கன்குடி கோயில் நடை திறப்பதில் தாமதம் பக்தர்கள் அதிருப்தி!
சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நடை திறப்பதில் தாமதமாவதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், பவுர்ணமி பூஜையில் கலந்க்ஷது கொண்டு தரிசனம் செய்ய, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதுபோல் நேற்று முன் தினம் அதிகாலை 6 மணி பூஜையில் கலந்து கொள்ள வந்த, 250 பக்தர்கள் நடை திறக்க தாமதமானதால் அதிருப்தி அடைந்தனர். அருப்புக்கோட்டையை பக்தர் குமார் ,"" கோயில் நடை காலை 6மணிக்கு திறப்பதற்கு பதிலாக 6.55 மணிக்கு திறக்கப்பட்டது 7.05 க்கு பூஜை நடந்தது. காலை ஆறுமணிக்கே நடைதிறந்து,பூஜைகள் செய்யப்படும் நிலையில், இருக்கன்குடியில் மட்டும் அடிக்கடி தாமதமாக திறக்கப்படுகிறது. வெள்ளி, செவ்வாய், ஞாயிற்று கிழமைகளில் தாமதம் இன்றி திறக்கப்படும் நடை, மற்ற நாட்களில் தாமதமாகிறது. தாமதம் குறித்து கேட்டால், இப்படித்தான் திறப்போம் என, அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர், என்றார். பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி ,"" வழக்கமாக காலை 5மணிக்கு திறக்கப்படும். 6.30க்கு பூஜைகள் செய்யப்படும். நேற்று முன் தினம் தாமதமாக திறந்தது பற்றி புகார் ஏதும் வரவில்லை, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். உதவி ஆணையர் மாரிமுத்து, கோயில் நடை திறப்பது,பூஜைகள் செய்வதை, 46 குடும்பத்தை சேர்ந்த பரம்பரை பூஜாரிகள் சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். நடை தாமதமாக திறக்கப்பட்டதாக புகார் வரவில்லை, எழுத்து பூர்வமாக புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடை திறப்பதில் தாமதமானால், மொபைல் எண் 99769 09145 ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.