ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - வேண்டாமே ஆடம்பரம்!
நடை, உடை, செயலால் பிறரை வசீகரிக்கும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் ராசியில் உள்ளார். மற்ற கிரகங்கள் எதிர்மறை பலன் தருகிற ஸ்தானங்களில் உள்ளனர். பிறரைப் பார்த்து ஆடம்பரம் பின்பற்றுவதால் அவமதிப்பும், வீண் செலவும் ஏற்படலாம். கவனம். வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை குறைவானவர்களுக்கு இடம் தரக்கூடாது. புத்திரர்கள் புரிதல் திறன் குறைவதால் பிடிவாத குணத்தைப் பின்பற்றுவர். பூர்வசொத்தில் வருகிற வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் புதிதாய் உருவாகும். கடந்தகாலத்தில் நீங்கள் வெறுத்து விலகிய சிலர் தருணம் பார்த்து உங்களுக்கு கெடுதல் செய்ய முயற்சிப்பர். அவர்களிடம் விலகுவது நல்லது. குடும்பச்செலவுக்கு பணத்தேவை அதிகரிப்பதால் சொத்தின்பேரில் கடன் பெறுவீர்கள். தம்பதியர் ஒற்றுமைக்கு குறையேதும் வராது. தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவதில் சில சங்கடங்களை எதிர்கொள்வர். வியாபாரிகளுக்கு லாபம் ஓரளவுக்கே இருக்கும். பணியாளர்களுக்கு சலுகைக்கு இடமில்லை. பணிபுரியும் பெண்கள் குளறுபடியான சூழ்நிலையை பணியில் எதிர்கொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் கஷ்ட சூழ்நிலையை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர். உறவுப்பெண்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, விற்பனையும் மிதமான பணவரவும் காண்பர். அரசியல்வாதிகள் மவுனம் கடைபிடித்து செயல்பட வேண்டிய காலம். விவசாயிகளுக்கு அளவான மகசூல், சீரான பணவரவு உண்டு. மாணவர்கள் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே சராசரி தேர்ச்சி பெறலாம்.
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் சிரமம் விலகி நன்மை ஏற்படும்.
உஷார் நாள்: 2.7.12 மாலை 6.21 முதல் 4.7.12 இரவு 9.49 வரை
வெற்றி நாள்: ஜூன் 22, 23
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 4, 5