உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - தம்பதி ஒற்றுமை

மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - தம்பதி ஒற்றுமை

நற்செயல் புரிந்து மனமகிழ்ச்சி பெறும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாறுபட்ட பலன் தரும் வகையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ராகுவும், சுக்கிரனும் சமசப்தம பார்வை பெற்று செயல்படுகின்றனர்.  தன்னம்பிக்கை குறைவைச் சரிசெய்வதால் மட்டுமே செயல்களில் வெற்றி கிடைக்கும். உங்களை கடந்த காலத்தில் அவமதித்து பேசியவர்களை நெருக்கடியான சூழ்நிலையில் சந்திக்க நேரலாம். இந்த சமயங்களில் உங்கள் மனம் பதிலுக்கு பழிவாங்க முயற்சிக்கும். பொறுமை காப்பதால் வம்பு, வீண் செலவில் இருந்து  தப்பிக்கலாம். வீடு, வாகன ஸ்தானம் நான்கில் செவ்வாய், சனி கிரகம் இருப்பது சில பாதக பலனைத் தரலாம். பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவதும், வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை உருவாக்குவதும் நற்பலன் பெற உதவும். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நலம் நன்றாக இருக்கும்.தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்துகொள்வர். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவர். உபதொழில் துவங்குகிற முயற்சியை தாமதப்படுத்தவும். வியாபாரிகள் சுமாரான விற்பனை காண்பர். பணியாளர்கள் பணியிடங்களில் உள்ள சூழ்நிலைகளை உணர்ந்து பேசுவதும் பணிபுரிவதும் மட்டுமே நன்மை பெற உதவும். பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் முரண்பட்ட ஆலோசனைகளை தவிர்ப்பதால் சிரமம் குறையும். குடும்பப் பெண்கள் கணவரின் மனம் விரும்பாத செயல்களை தவிர்த்து மகிழ்ச்சியும் நல்ல சூழ்நிலையையும் வளர்ப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, விற்பனை காண்பர். சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள் பகையாளரிடம் இருந்து விலகுவது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.
உஷார் நாள்: 4.7.12 இரவு 9.49 முதல் 7.7.12 பகல் 3 வரை
வெற்றி நாள்: ஜூன் 24, 25
நிறம்: சந்தனம், வயலட்   எண்: 3, 7


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !