உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - சூப்பர் மாதம்

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - சூப்பர் மாதம்

கருணை மனதுடன் பிறருக்கு உதவும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் கேதுவின் நட்சத்திரமான அசுவினியில் தனது சஞ்சாரத்தை துவக்குகிறார். குருவுடன் சேர்ந்த கேதுவின் பார்வை ராசியில் பதிகிறது. இதனால் ஆன்மிகப் பணிகளில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். செவ்வாய், சனி, சுக்கிரன், கேது, குரு ஆகியோர் உங்கள் வாழ்வு சிறக்க உரிய நற்பலன்களை அள்ளி வழங்குவர். பேச்சு, செயலில் வளர்ச்சிக்கான திட்டம் எதிரொலிக்கும். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சிமாற்றம் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். புத்திரர்கள் திறமைகளை வளர்க்க உரிய ஆலோசனை, உதவி புரிவீர்கள். சொத்துக்களின் வழியாக கிடைக்கிற வருமானம் உயரும். எதிரிகளால் வந்த கெடுசெயல் பலமிழந்து போகும். வழக்கில் சாதகமான தீர்வு கிடைக்கும். கணவன், மனைவி சிறு சச்சரவுகளை பெரிதுபடுத்தாமல் குடும்பநலன் சிறக்க பாடுபடுவர். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தொழிலதிபர்கள் உற்பத்தி சிறக்க கூடுதல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உபரி வருமானம் காண்பர். புதிய சொத்துவாங்க யோகமுண்டு. பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.  பணிபுரியும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு நன்மதிப்பு பெறுவர். குடும்ப பெண்கள் கணவருடன் வாக்குவாதம் தவிர்த்து குடும்பநலன் சிறக்க தேவையான பணி புரிவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தியை உயர்த்துவர். அரசியல்வாதிகள் எதிரிகளின் செயலால் கூட நன்மையே பெறுவர். விவசாயிகளுக்கு விளைச்சலும் கால்நடை வளர்ப்பிலும் அதிக பணவரவைத்தரும். மாணவர்கள் தரத்தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணம் சிரமம் இன்றி கிடைக்கும்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் துவங்கும் செயலில் வெற்றி அதிகரிக்கும்.
உஷார் நாள்: 7.7.12 பகல் 3 முதல் 9.7.12 காலை 10.33 வரை
வெற்றிநாள்: ஜூன் 26, 27
நிறம்: நீலம், ஆரஞ்ச்         எண்: 1, 8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !