உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம் (மகம், பூரம், உத்திரம்1) - பேச்சா..மூச்..

சிம்மம் (மகம், பூரம், உத்திரம்1) - பேச்சா..மூச்..

துணிச்சலுடன் செயல்புரிந்து புகழ்பெறும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் பதினொன்றாம் இடமான ஆதாய ஸ்தானத்தில் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். பிற கிரகங்கள் அனுகூலக் குறைவாக செயல்படுகின்றனர். இதனால் சுயபலத்தையே பெரிதும் சார்ந்து பணிபுரிவீர்கள். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், சனியின் அமர்வு உள்ளதால் பேச்சில் கோபமும் வெறுப்பு உணர்வும் வெளிப்படும். இதனால் சிலரது பகைமையை சந்திக்க நேரிடலாம். கவனம். இளைய சகோதரர்களுக்கு உதவுவதால் செலவு அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை குறைவானவர்களுக்கு இடம்தரவேண்டாம். புத்திரர்கள் படிப்பில் சிறக்க மாற்று பயிற்சிமுறை தர உரிய ஏற்பாடு செய்வீர்கள். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு சிறிது குறையும். உடல்நலம் சுமார். குடும்ப செலவுகளை சரிக்கட்ட கடன் பெறுவீர்கள். தம்பதியர் சுயகவுரவ சிந்தனைகளால் கருத்துபேதம் கொள்வர். தொழிலதிபர்களுக்கு அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். லாபம் சுமார். வியாபாரிகள் அளவான லாபம் என்கிற நடைமுறையை பின்பற்றுவதால் மட்டுமே விற்பனை ஓரளவுக்கு இருக்கும். பணியாளர்கள் கடந்த கால குறையை சரிசெய்வர். இதனால் நற்பெயர் ஏற்படும். சலுகைகள் வழக்கம் போல் இருக்கும். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சூழ்நிலைகளை உணர்ந்து பேசுவதால் அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் அனுமதி இன்றி கடன் பெறக்கூடாது. குடும்பச் செலவுகளில் சிக்கனம் நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களுக்கு சரக்கு கொடுப்பதை முழு கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது. அரசியல்வாதிகள் தன்னை அவமானப்படுத்தியவர்களை பற்றிய விமர்சனத்தில் நிதானம் கடைபிடிப்பது நல்லது. விவசாயிகள் சராசரி மகசூல், அளவான லாபம் பெறுவர். மாணவர்கள் சுமாராகப் படிப்பர்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதால் தொல்லை குறையும்.
உஷார் நாள்: 9.7.12 காலை 10.33 முதல் 11.7.12 இரவு 8.27 வரை
வெற்றி நாள்: ஜூன் 28, 29, 30
நிறம்: வெள்ளை, மஞ்சள்       எண்: 3, 6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !