கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) - மங்கல நிகழ்ச்சி
அழகை ஆராதிக்கும் கலைரசனை மிகுந்த கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் ஆதாய ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். குரு, சுக்கிரன், ராகு, சூரியன் சிறந்த பலன்களைத் தருவர். ராசியில் செவ்வாய், சனியின் அமர்வு உங்களை தகுதிக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபடத் தூண்டும். கவனம். பேச்சில் இனிமையும் வசீகரமும் நிறைந்திருக்கும். புகழ்பெறத் தேவையான பணிகளைச் செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி சீராக கிடைக்கும். புத்திரர்கள் படிப்பில் தேர்ச்சி பெறுவர். கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதையும் மின்சார உபகரணங்களை கையாளுவதிலும் புத்திரர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல்நிலை சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் நல்லவிதமாக அமைந்து எதிர்பார்த்த நன்மையை பெற்றுத்தரும். தம்பதியர் தங்கள் குழந்தைகளின் மங்கல நிகழ்ச்சியை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்வர். தொழிலதிபர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த மந்தநிலை மாறி உற்பத்தி உயரும். உபரி வருமானம் உண்டு. வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் சரக்கு கொள்முதலை உயர்த்துவர். விற்பனை சிறந்து தாராள பணவரவைத்தரும். பணியாளர்கள் திறமைமிகு செயலால் பணியின் தரத்தை உயர்த்துவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் நன்மதிப்பை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவரவு காண்பர். புதிய தொழில் கருவிகள் வாங்குவதற்கான திட்டம் நிறைவேறும். அரசியல்வாதிகளின் செயல்களில் லட்சிய உறுதியும் திறமையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி வந்து சேரும். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் தரத்தேர்ச்சி பெற்று ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
உஷார் நாள்: 15.6.12 காலை 6.01 முதல் 16.6.12 நள்ளிரவு 12.40 வரை மற்றும் 11.7.12 இரவு 8.27 முதல் 14.7.12 காலை 7.58 வரை
வெற்றி நாள்: ஜூலை 1, 2
நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 1, 6