துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - கவனமா வண்டி ஓட்டுங்க!
நியாய தர்மத்தை பெரிதென போற்றும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று அனுகூல பலன் தரும் வகையில் உள்ளார். பத்தாம் இடத்தில் அமர்வு பெற்றுள்ள புதனும் தன் பங்கிற்கு நன்மையை வழங்குவார். மற்ற கிரகங்களின் போக்கு காரணமாக அதிகசெலவு ஏற்படும். மனதில் இனம்புரியாத அளவில் அவ்வப்போது கவலை ஏற்படும். வாகன ஸ்தான கிரகம் சனி, செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளதால் வாகன பராமரிப்பில் கவனமும் பயணத்தில் குறைந்த வேகமும் பின்பற்றுவது அவசியம். புத்திரர்கள் பிடிவாத குணங்களுடன் செயல்படுகிற கிரகநிலை உள்ளது. அவர்களை கண்டிப்பதிலும் தேவைகளை நிறைவேற்றுவதிலும் நிதானமாகச் செயல்படுங்கள். எதிரிகளின் கெடுசெயல்களால் விரக்தியும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படலாம். பொறுமை காக்கவும். தம்பதியர் குடும்ப சூழ்நிலை உணர்ந்து ஒற்றுமை மனதுடன் நடந்துகொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை அடைய கூடுதல் உழைப்புடன், அதிக முதலீடு செய்ய வேண்டி இருக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை திட்டமிட்டபடி நிறைவேற்றினாலும் லாபம் குறைந்தே இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக வாய்ப்புண்டு. சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள் குளறுபடியை சரிசெய்து பணி இலக்கை அடைவர். குடும்பப் பெண்கள் கணவரின் எண்ணங்களை மதித்து நடப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மங்கல நிகழ்வும் ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் புதிய ஆர்டர் பெறுவர். விற்பனை சிறந்து பணவரவு சீராகும். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் இரு தரப்பு நியாயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், மிதமான பணவரவு உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறக்க கூடுதல் முயற்சி அவசியம். செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.
பரிகாரம்: முருனை வழிபடுவதால் பாதுகாப்பும் வளமும் பெறலாம்.
உஷார் நாள்: 16.6.12 நள்ளிரவு 12.40 மணி முதல் 19.6.12 மதியம் 12.04 வரை மற்றும் 14.7.12 காலை 7.58 முதல் 15.7.12 முழுவதும்
வெற்றி நாள்: ஜூலை 3, 4
நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 8